தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேழ முகத்தோனின் வியத்தகு ஆலயம்; அதிசயங்கள் நிறைந்த ஆன்மிக குகை!

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள படால் குகையில் சிவபெருமான் அமர்ந்திருக்கிறார், மற்ற கடவுளர்கள் அவரை வணங்க இங்கு வருகிறார்கள். சிவபெருமானின் கோபத்துக்கு ஆளான விநாயகரின் தலை இங்குதான் விழுந்தது. இவ்வாறு பல்வேறு அதிசயங்கள் நிறைந்த இந்த ஆன்மிகக் குகைக்குள் பயணிக்கலாம். வாருங்கள்.

Lord Shiva Patal cave Pithoragadh விநாயகர் சதுர்த்தி சிறப்பு உத்தரகாண்ட் விநாயகர் கோயில் சிவன் பிரம்மா விஷ்ணு படால் குகை Patal Bhubaneshwar Shree Ganesh's real head விநாயகர் சதுர்த்தி 2020 வேழ முகத்தோன்
Lord Shiva Patal cave Pithoragadh விநாயகர் சதுர்த்தி சிறப்பு உத்தரகாண்ட் விநாயகர் கோயில் சிவன் பிரம்மா விஷ்ணு படால் குகை Patal Bhubaneshwar Shree Ganesh's real head விநாயகர் சதுர்த்தி 2020 வேழ முகத்தோன்

By

Published : Aug 22, 2020, 7:00 AM IST

Updated : Aug 25, 2020, 10:15 PM IST

பித்தோராகர்: பொதுவாக குகைகள் ஆர்வத்தை உருவாக்குகின்றன. பல குகைகள் வரலாற்று சிறப்புமிக்க பழங்கால மர்மமான கதைகளைக் கொண்டுள்ளன. அத்தகைய ஒரு குகை உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகாத் மாவட்டத்தின் கங்கோலிஹாட் தெஹ்ஸில் அமைந்துள்ளது.

சிவபெருமானின் கோபத்தைத் தொடர்ந்து விநாயகரின் தலை உடற்பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டு இந்த குகையில் விழுந்தது என்பது ஐதீகம். இந்தக் குகை பற்றியும், இதில் கூறப்படும் கதைகள் குறித்தும் புராணங்களில் விரிவான விளக்கம் உள்ளது.
குகை ஒரு அதிசயம்
அந்தக் குகைதான் பிரதான கடல் மட்டத்திலிருந்து 1,350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள படால் புவனேஸ்வர் குகை. இது, பிரதான நுழைவாயிலிலிருந்து 160 மீட்டர் நீளமும் 90 மீட்டர் ஆழமும் கொண்டது.

படால் புவனேஸ்வர் குகையில் இருந்து கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் அமர்நாத் ஆகிய புனிதத் தலங்களின் தரிசனத்தையும் பெறலாம். இந்தக் குகையைப் பற்றி ஸ்கந்தபுராணத்திலும் குறிப்புகள் உள்ளன.
நம்பிக்கைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்

இந்தக் குகையில் விநாயக பெருமானின் தலை அமைந்துள்ளது. விநாயகர் பிறந்ததைப் பற்றி பல கதைகள் உள்ளன. ஒருமுறை சிவபெருமான் கோபம் காரணமாக விநாயகரின் தலையை கொய்துவிட்டார். பின்னர், அன்னை பார்வதி தேவியின் வற்புறுத்தலினால், யானையின் தலையுடன் இணைத்தார், சிவபெருமான் கொய்த விநாயகரின் உண்மையான தலை, படால் குகைக்குள் வைக்கப்பட்டது.

இந்தக் குகைக்குள் விநாயகரின் தலை ஒரு பாறை வடிவத்தில் உள்ளது. இந்தப் பாறைக்கு மேல் 100 தாமரை இதழ்களை சித்தரிக்கும் வகையில் மற்றொரு பாறை அமைந்துள்ளது. இதிலிருந்து விநாயகரின் தலை மீது தேன் விழுகிறது. அதில் ஒரு துளி, துல்லியமாக விநாயகரின் வாய் மீது விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரம்மகமலத்தை சிவபெருமான் நிறுவினார் என்றும் நம்பப்படுகிறது.
புராணங்களில் விளக்கம்
இதற்கான விளக்கம் புராணங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குகையில் சிவபெருமான் வசிக்கிறார், அவரை வணங்க அனைத்து தேவர்களும் இங்கு வருகிறார்கள். த்ரேதா யுகத்தில் அயோத்தி மன்னர் ரிதுபர்ணா மான் ஒன்றை துரத்திக் கொண்டு இங்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு சிவபெருமான் மற்றும் பிற கடவுள்களின் காட்சி கிடைத்தது.

அதன்பின்னர் துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் இங்கு பரமபதம் விளையாடினார்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இந்நிலையில் கி.பி. 722ஆம் ஆண்டு கலியுகத்தில் ஜெகத்குரு சங்கராச்சாரியார் இந்த குகைக்குள் சென்று பார்த்தார். அப்போது எங்கு பார்த்தாலும் பிரகாசமாக தெரிந்தது. சிவலிங்கத்தின் ஒளி, கண்ணை பறிக்கும் அளவிற்கு பிரகாசமாக இருந்தது. இதையடுத்து அவர் சிவலிங்கத்தை தாமிரத்தை கொண்டு மூடினார். இதையடுத்து சந்த் மன்னர்கள் இந்தக் குகையை கண்டறிந்தனர்.

கலியுகத்தின் முடிவு
மேலும், இந்தக் குகைக்குள் நான்கு யுகங்களைக் குறிக்கும் தலா நான்கு கற்கள் உள்ளன. அந்தக் கற்களில் ஒன்று, கலி யுகத்தை குறிக்கிறது. இந்தக் கல் படிப்படியாக உயர்கிறது கொண்டே இருக்கிறது. இது, குகையின் உச்சியை எட்டும் நாளில் கலி யுகம் முடிவடையும் என்றும் நம்பப்படுகிறது.

பண்டைய வரலாறு
இந்து மத புராணங்களின்படி, நான்கு யுகங்களையும் காணக்கூடிய இடம், படால் புவனேஸ்வரை தவிர வேறு எங்கும் இல்லை. மேலும், நான்கு யாத்திரைகளின் பலன்களைப் தருகிறது என்று நம்பப்படுகிறது. நான்கு யுகங்களையும் குறிக்கும் நான்கு வாயில்கள் உள்ளன.

வேழ முகத்தோனின் வியத்தகு ஆலயம்; அதிசயங்கள் நிறைந்த ஆன்மிக குகை!

33 கடவுள்களும் தெய்வங்களும் இந்தக் குகையில் வசிக்கின்றன. கால பைரவர் (காவல் தெய்வம்) வாய் குகையும் அமைந்துள்ளது. இங்கு கால பைரவரின் வாய்க்குள் நுழையும் ஒருவர், வால் பகுதியை அடைய முடிந்தால் அவர் இரட்சிப்பை அடைவார் என்று நம்பப்படுகிறது.
மேலும், இந்தக் குகையில் இருந்து கேதர்நாத், பத்ரிநாத், அமர்நாத் ஆகிய புனிதத் தலங்களின் தரிசனத்தையும் ஒருவர் பெறலாம். குகையில் நாக்கு வடிவத்தில் ஒரு பாறை உள்ளது. இங்கு கால பைரவிரின் நாக்கைக் காணலாம்.

குகையில் உள்ள தெய்வ உருவங்கள்
இந்தக் குகையின் நுழைவாயிலில் நரசிம்மரைக் காணலாம். இன்னும் சிறிது கீழே ஆதிசேஷனின் நாக்கு (ஐந்து தலை நாகப்பாம்பு) வடிவத்தில் ஒரு கல் உள்ளது. இங்குதான் ஆதிசேஷனின் நாக்கு பூமியின் மீது படுகிறது என்பதும் நம்பிக்கை.

அங்கிருந்து கொஞ்சம் கீழே பார்த்தால், ஒரு பாறையில் காமதேனு உள்ளிட்ட பசு மாடுகளின் வடிவத்தில் ஒரு பாறை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடவுள்களின் காலத்தில் பசும்பால் பாய்ந்தோடியது என்பது நம்பிக்கை. தற்போது இங்கிருந்து தண்ணீர் விழுகிறது.

இங்குள்ள குளத்தின் மீது வளைந்த கழுத்துடன் வாத்து ஒன்று உள்ளது. இந்தக் குளத்தை நாகங்களுக்காக சிவபெருமான் கட்டினார் என்றும் ஒருமுறை வாத்து குளத்தில் இறங்கியதும் அதனை சிவபெருமான் தண்டித்தார். இதனால் கோபங்கொண்ட பிரம்மா அந்தக் குளத்தை அசுத்தமாக்க துணிந்தார் என்பதும் மற்றொரு நம்பிக்கை.

Last Updated : Aug 25, 2020, 10:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details