தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏழை மக்களுக்கு உதவிய அமைச்சர்களைப் பாராட்டிய ராம் விலாஸ் பாஸ்வான் - உணவுத் துறை அமைச்சர்களுக்கு பாராட்டு

டெல்லி: பல்வேறு மாநில உணவுத் துறை அமைச்சர்களிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், ஏழை மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கியதற்காக அமைச்சர்களைப் பாராட்டினார்.

உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்
உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்

By

Published : May 23, 2020, 6:46 PM IST

உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பல்வேறு மாநில உணவுத் துறை அமைச்சர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் உரையாடினார்.

அதில், கரோனா தொற்று பரவுதலின்போது செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்து உணவுத் துறை அமைச்சர்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து, ஏழை மக்களுக்கும் , குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தேவையான உணவுப் பொருள்களை வழங்கியதற்காக அனைவரையும் பாராட்டினார்.

'ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை' என்னும் திட்டம், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உதவும் என்றார்.

மேலும், ஏழைகளுக்கு உணவுப் பொருள்கள் முறையாக விநியோகிப்பதை உறுதி செய்யுமாறு மாநில அமைச்சர்கள், அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 8 கோடி மக்களுக்கு 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்க முடிவு: பாஸ்வான்

ABOUT THE AUTHOR

...view details