தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுவை - ஹைதராபாத் விமானம் ரத்து: பயணிகள் அதிருப்தி - புதுவை லாஸ்பேட்டை

புதுச்சேரி: புதுவை - ஹைதராபாத் இடையேயான தினசரி விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வெளியான அறிவிப்பால், பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது.

plane

By

Published : Jul 23, 2019, 10:39 PM IST

புதுவை லாஸ்பேட்டையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையம் அமைக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு, பின்னர் வரவேற்பு இல்லாத காரணத்தால் அந்த விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன.

அதன்பின், கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்பு புதுச்சேரியிலிருந்து தினசரி சேவையாக பெங்களூர், ஹைதராபாத் நகரங்களுக்கு விமானங்கள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத் செல்லும் விமானம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வெளியான அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 45 நாட்களுக்குப் பின்னர் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்துக்கு வழக்கம்போல் விமானங்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு வாரம் ஐந்து நாட்கள் செல்லும் விமானம் தற்போது தினசரி சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details