சுப்பிரியா உன்னி நாயர் என்ற பெண் தனது 75 வயதுடைய தாயுடன் சென்னையிலிருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானம் மூலம் திங்கள்கிழமை (ஜனவரி 13) பயணித்துள்ளார். விமானம் இரவு 9.15 விமானம் பெங்களூருவில் தரையிறங்கியது. அவர் விமான ஊழியர்களிடம் சக்கர நாற்காலியைக் கேட்டுள்ளார்.
அதற்கு விமான ஊழியர்கள் தங்களால் சக்கர நாற்காலியை தர முடியாது என்று கூறியுள்ளனர். அப்போது சுப்பிரியா, டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே சக்கர நாற்காலி தேவை என்று குறிப்பிட்டுள்ளதாகவும், சக்கர நாற்காலி இல்லாமல் தன் தாயை அழைத்துச் செல்வது சிரமம் என்றும் கூறியுள்ளார்.
அப்போது அங்கிருந்த இண்டிகோ விமானி ஜெயகிருஷ்ணா, திடீரென்று தங்களை மிரட்டும் தொனியில் பேசத் தொடங்கியதாகவும் இரவு முழுவதும் விமான நிலையத்தில் இருக்கும்படி செய்துவிடுவேன் என்றும் அச்சுறுத்தியதாகவும் சுப்பிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த விமான போக்குவரத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, "சுப்பிரியாவின் ட்வீட்டை கண்டதுமே, விமானியின் நடவடிக்கை குறித்து இண்டிகோவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. உடனடியாக அந்த விமானி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என இண்டிகோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: 'பிரித்தாலும் சூழ்ச்சியைக் கைவிடுங்கள் மோடி' - காங்கிரஸ்