ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான அரசுப் பேருந்து ஒன்று கிருஷ்ணா மாவட்டத்தின் காஞ்கீச்சரா சுங்க சோதனை சாவடி அருகே சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தை மடக்கி மாநில காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது பேருந்துக்குள் இருந்த சூட்கேஸ் ஒன்றில் கத்தை கத்தையாக ரூ.45 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவலர்கள் அங்கிருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.
ஒரு பயணி முன்னுக்கு பின் முரணான தகவல் கொடுத்தார். இதையடுத்து அவரிடம் காவலர்கள் துருவி துருவி விசாரணை நடத்திவருகின்றனர்.