உ.பி மாநிலத்தின் பதாவுன் மக்களவைத் தொகுதிக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் சங்கமித்ரா மவுரியா போட்டியிடுகிறார்.
தொண்டர்களிடம் கள்ள ஓட்டுப் போட சொன்ன பாஜக பெண் வேட்பாளர்! - ParliamentaryElection2019
லக்னோ: தேர்தலில் வாக்களிக்க வராதவர்களின் ஓட்டுகளை கட்சியினரே போட வேண்டும் என்று பாஜக வேட்பாளர் சங்கமித்ரா மவுரியா தொண்டர்களிடம் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![தொண்டர்களிடம் கள்ள ஓட்டுப் போட சொன்ன பாஜக பெண் வேட்பாளர்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3063427-thumbnail-3x2-uijhu.jpg)
தொண்டர்களிடம் கள்ள ஓட்டுப் போடச் சொன்ன பாஜக பெண் வேட்பாளர்!
அம்மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியாவின் மகளான இவர், கட்சித் தொண்டர்கள் மத்தியில் தேர்தல் பரப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், " நமது தொகுதியில் முழு வாக்குப்பதிவு நடக்க வேண்டும். தேர்தல் அன்று சிலர் வாக்களிக்க வராமல் இருக்கலாம். அதற்காக அந்த ஓட்டு வீணாகி விடக் கூடாது. யாராவது ஓட்டுப் போட வரவில்லை என்றால் அதை கள்ள ஓட்டாக பதிவு செய்யுங்கள்" என தெரிவித்தார். தற்போது இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
Last Updated : Apr 21, 2019, 2:00 PM IST