மேற்குவங்கத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியாக வடக்கு கொல்கத்தா, மத்திய கொல்கத்தா உள்ளிட்ட பல பகுதிகளில் சீல் வைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தெற்கு கொல்கத்தாவின் சில பகுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. சாலைகளை அடைத்து சீல் வைக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவைக்குக்கூட மக்கள் வெளியில் வரமுடியவில்லை. தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியே வரவும், சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வெளியாள்கள் உள்ளே நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அதிகப்படியான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநகராட்சி சார்பில் வீடுகளுக்கே சென்று கரோனா அறிகுறிகளை பரிசோதனை செய்துவருகின்றனர்.