சந்திராயன் - 2 விண்கலம் ஜூலை 22ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலம் செப்டம்பர் 6 அல்லது 7ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மாணவர்களுக்கு நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
சந்திராயன் - 2 தரையிறங்குவதைப் பிரதமருடன் பார்க்க அரிய வாய்ப்பு! - prime minister
டெல்லி: சந்திராயன் - 2 சந்திரனில் தரையிறங்குவதைப் பிரதமருடன் பார்க்க மாணவர்களுக்கு அரிய வாய்ப்பை இஸ்ரோ வழங்கியுள்ளது.
![சந்திராயன் - 2 தரையிறங்குவதைப் பிரதமருடன் பார்க்க அரிய வாய்ப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4032864-thumbnail-3x2-chan.jpg)
நாடு முழுவதும் எட்டு முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இஸ்ரோ அமைப்பு வினாடி-வினா போட்டியை அறிவித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசாக சந்திராயன் - 2 சந்திரனில் தரையிறங்குவதைப் பிரதமருடன் பார்க்கும் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் நடக்கவுள்ள இந்த வினாடி-வினாவில் 20 கேள்விகள் கேட்கப்படும். இவற்றுக்கு 300 வினாடிகளுக்குள் பதிலளிக்க வேண்டும்.
போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் mygov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என இஸ்ரோ அமைப்பு அறிவித்துள்ளது. மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் இரண்டு மாணவர்கள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் பிரதமருடன் சேர்ந்து சந்திராயன் - 2 சந்திரனில் தரையிறங்குவதை பார்க்க உள்ளனர்.