சாஸ்த்ரி பவனின் நான்காவது தளத்தில் இயங்கும் சட்ட அமைச்சத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்கு பணிபுரியும் மூத்த அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சட்ட அமைச்சகம் அமைந்துள்ள தளத்தின் ஒரு பகுதி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
அரசு அலுவலகமான நிதி ஆயோக் கட்டடம் சென்ற மாதம் சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது சாஸ்திரி பவனின் ஒரு பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.