உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி ஏரியில் கடந்த ஆண்டு மிதக்கும் உணவகம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. மெரினா என்று பெயரிடப்பட்ட அந்த உணவகம் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் அம்மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்டது. இந்த உணவகத்தை விளம்பரப்படுத்தும் வகையில், அம்மாநில அமைச்சரவை கூட்டம் ஒன்று அங்கு நடந்தது.
தண்ணீரில் மூழ்கிய 'மெரினா' உணவகம்! - Floating Restaurant
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி ஏரியில் மெரினா என்ற மிதக்கும் உணவகத்தின் ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கியது.
![தண்ணீரில் மூழ்கிய 'மெரினா' உணவகம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3220156-thumbnail-3x2-ship.jpg)
மிதக்கும் ஓட்டல் மூழ்கியது
இந்நிலையில், மிதக்கும் மெரினா உணவகத்தின் ஒரு பகுதி தெஹ்ரி ஏரியில் மூழ்கியது. மூழ்கிய உணவகத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. கோடை காலத்தை முன்னிட்டு, ஏரியில் நீர் மட்டம் குறைந்ததால் ஓட்டல் மூழ்கி இருக்கலாம் என, அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.