தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார்: ஒரு மாதம் கூட ஆகாத பாலம் இடிந்து விழுந்த பரிதாபம்! - பீகாரில் இடிந்து விழும் பாலங்கள்

பாட்னா: திறப்பு விழா கண்டு ஒரு மாதம் கூட கடக்காத பாலம் இடிந்து விழுந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முதலமைச்சர் அடிக்கல் நாட்டி ஒரு மாதம் கூட ஆகாத பாலம் இடிந்து விழுந்த பரிதாபம்!
முதலமைச்சர் அடிக்கல் நாட்டி ஒரு மாதம் கூட ஆகாத பாலம் இடிந்து விழுந்த பரிதாபம்!

By

Published : Jul 16, 2020, 6:37 PM IST

பிகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தை கோபால்கஞ்ச், ஷிவான், சரண் உள்ளிட்ட மாவட்டங்களோடு, கந்தக் ஆற்றின் வழியாக இணைக்கும் பொருட்டு ரூ.263.48 கோடி செலவில் சத்தர்காட் பாலம் கட்டப்பட்டது.

இதை ஜூலை மாதம் 16ஆம் தேதி பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்துவைத்தார்.

ஒரு மாதம் கூட ஆகாத பாலம் இடிந்து விழுந்த பரிதாபம்!

இந்நிலையில் திறந்து வைத்து ஒரு மாதம் கூட முழுமை பெறாமல் (29 நாள்கள் மட்டுமே), இருக்கும் நிலையில், நேற்று (ஜூலை15) பாலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதனால் வடக்கு பிகாரில் உள்ள பல மாவட்டங்களுக்குள் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது கந்தக் ஆற்றின் நீர் போக்கு அதிகரித்துவருவதால், சரண் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பாலத்தின் நிலையை அறிய அலுவலர்கள், பாலம் கூட்டமைப்பின் தலைவர் பொறியாளர் அபய் குமார் பிரபாத் உள்ளிட்ட பொறியாளர்கள் சேர்ந்து பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை ஆராய்ந்துவருகின்றனர்.

பிகார் சாலை கட்டுமானத் துறை அமைச்சர் நந்த் கிஷோர் யாதவ்

இது குறித்து பிகார் சாலை கட்டுமானத் துறை அமைச்சர் நந்த் கிஷோர் யாதவ் கூறுகையில், பாலத்தில் உள்ள சிறிய பாலத்தின் ஸ்லாப்தான் இடிந்து விழுந்துள்ளது. இதனால் மற்ற பாலங்களுக்கு பாதிப்பும், சேதமும் இல்லை” என்றார்.

இந்நிலையில் இது குறித்து கூறிய ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஷ்வி யாதவ் “கடந்த எட்டு ஆண்டுகளாக கட்டப்பட்டுவந்த பாலம், திறந்து வைக்கப்பட்டு 29 நாள்களே ஆன நிலையில், அடித்து செல்லப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் ஆட்சியில் பாலம் இடிந்துவிழுவது எல்லாம் சாதாரணமான விஷயமாகிவிட்டது. மக்களின் பாராட்டை பெறுவதற்காகதான் பாலம் திறந்து வைக்கிறாரா? பாலம் கட்டிய நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஷ்வி யாதவ்

மேலும், “முன்பு திறந்து வைக்கப்பட்ட அதே நாளில் கஹல்கானில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. இது போன்று பாலங்கள் இடிந்து விழுவதால் மக்களின் பணத்தை மீட்பது யார்? கடந்த 15 ஆண்டுகளில் 55 ஊழல்களில் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்” எனவும் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க...கிராமப்புற மாணவர்களுக்கு கானல்நீராகும் ஆன்லைன் கல்வி!

ABOUT THE AUTHOR

...view details