இந்தியாவைச் சேர்ந்த பல பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை, இஸ்ரேல் நிறுவனம் ஒன்று வாட்ஸ்அப் செயலி மூலம் வேவு பார்த்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலி மூலம் பல இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
1,400 இந்திய பயனாளிகளை மத்திய அரசு வேவு பார்ப்பதற்கு, அந்த இஸ்ரேலிய நிறுவனம் உதவியதாக பலதரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. தலித் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மூத்த அரசு அலுவலர்கள், அரசுக்கு எதிரான கருத்துடையவர்கள் ஆகியோர் வேவு பார்க்கப்பட்டார்கள் என வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிரபல பத்திரிகையில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.