நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை இரு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட கூட்டம், ஜனவரி 29ஆம் தேதி கூடுகிறது. அப்போது மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனவரி 29 தொடக்கம்! - ஜனவரி 29இல் துவக்கம்
டெல்லி: நடப்பாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல்கட்டம், ஜனவரி 29ஆம் தேதி தொடங்குகிறது.
டெல்லி
இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசின் சார்பில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
பின்னர், பிப்ரவரி 15ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடக்கும் என கூறப்படுகிறது. அதன்பின், இரண்டாம் கட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர், மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் துறைகள் மீதான விவாதம் நடைபெறும் என கூறப்படுகிறது.