மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த வியாழன் அன்று வெளியானது, அதில் 542 லோக் சபா சீட்டுகளில், பாஜக 303 இடங்களில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
நாடாளுமன்றம் செல்லும் படித்த எம்.பி.க்கள் எத்தனை பேர்? - பிஆர்எஸ் ஆய்வு நிறுவனம்
டெல்லி: 17ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற 542 எம்.பி.க்களில் நாடளுமன்றத்திற்கு செல்லும் 394 எம்.பி.க்கள் படித்தவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடளுமன்றம்
இந்நிலையில், பாஜக மற்றும் பிற கட்சிகளின் எம்.பி.க்களை ஒட்டுமொத்தமாக சேர்த்தால், நாடாளுமன்றம் செல்லும் எம்.பிக்களில் 394 பேர் படித்தவர்கள் என பி.ஆர்.எஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பி.ஆர்.எஸ் ஆய்வின் முடிவுகளில், நாடாளுமன்றம் செல்ல இருக்கும் 542 எம்.பிக்களில் 43% பேர் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், 25% சதவீதம் முதுகலைப் பட்டதாரிகள், மற்றும் 4% சதவீதம் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என தெரியவந்துள்ளது.