தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதன்முறையாக அமைக்கப்பட்ட பூங்கா!

பஞ்சகுலா: வடமாநிலங்களில் முதன்முறையாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு திறந்தவெளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பூங்கா

By

Published : Oct 1, 2019, 8:42 AM IST

Updated : Oct 1, 2019, 9:47 AM IST

ஹரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு என சிறப்பு திறந்தவெளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட பூங்கா என இந்தப் பூங்கா பெயர் பெற்றுள்ளது. இந்த பூங்கா, 6 ஏக்கர் நிலத்தில் 65 லட்சம் மதிப்பில் ரிலையன்ஸ் பவுண்டேஷனால் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவில் சிறப்பு குழந்தைகளுக்கு என தனியாக ஊஞ்சல் விளையாடுவதற்கு ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காவில், குழந்தைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கு என தனியாக பேச்சு பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட்டுகள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசுகையில், இந்த முயற்சி பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் குழந்தைகள் தொடர்ந்து பூங்காவுக்கு வருகை தருவார்கள் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Last Updated : Oct 1, 2019, 9:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details