ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் அதனை அச்சமின்றி எதிர்கொள்வது குறித்த கலந்துரையாடல் (பரிக்ஷா பே சார்ச்சா) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். நாடு முழுவதிலிருந்தும் தேர்வுசெய்யப்பட்ட இரண்டாயிரம் மாணவர்கள் டெல்லியில் உள்ள தல்கோதரா மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அங்கு பேசிய மோடி, "பிரதமராக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். அந்நிகழ்ச்சிகள் பல்வேறுவிதமான அனுபவங்களைத் தந்துள்ளன. ஆனால், மனதுக்கு பிடித்த நிகழ்ச்சி என்னவென்று கேட்டால் நான் இந்நிகழ்ச்சியைத்தான் (பரிக்ஷா பே சார்ச்சா) சொல்வேன்" என்றார்.