கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சரும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமாகிய ஜி. பரமேஸ்வர் உறுப்பினராக உள்ள அறக்கட்டளை நடத்திய மருத்துவச் சேர்க்கையின் மூலம் ஏராளமான கறுப்புப் பணம் குவிந்திருப்பதாகப் புகார் எழுந்தது.
இதனையடுத்து, நேற்று ஜி. பரமேஸ்வரின் பெங்களூரு வீடு உள்பட அவருக்குத் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமானவரிச் சோதனையை அலுவலர்கள் மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று பரமேஸ்வரின் உதவியாளர் ரமேஷ் பெங்களூருவில் உள்ள ஜனபாரதி வளாகத்தின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் வீட்டில் ரெய்டு: உதவியாளர் தற்கொலை! முன்னதாக பரமேஸ்வரின் வீட்டில் சோதனை நடத்திய வருமானவரித் துறை அலுவலர்கள் ரமேஷை தொடர்பு கொண்டபோது, தொடர்புகொள்ள முடியவில்லை குறிப்பிடத்தக்கது.