இந்த திட்டத்தைக் குறித்து ஆலோசனை நடத்தும் கூட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஏற்பாடு செய்திருந்தார்.
நிதி ஆயோக்கின் தலைமை செயல் அலுவலர் அமிதாப் கந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்தியா முழுவதும் 150 தனியார் ரயில்கள் இயக்கப்படும் நூறு வழித்தடங்களை 10-12 குழக்களாக பிரிக்கப்படவுள்ளது.
அதில் முக்கிய வழித்தடங்களான டெல்லி - பாட்னா, அலகாபாத் - புனே, ஹவ்ரா - சென்னை உள்ளிட்ட வழித்தடங்கள் அடங்கும். ரயில் பயணிகளின் வசதிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் தனியார் ரயில்களை இயக்கும் அத்திட்டதிற்கு 22 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஒதுக்க நிதி ஆயோக் குழுவும் ரயில்வே துறையும் முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் ரயில்வேத் துறை அலுவலர்கள், நிதி ஆயோக் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த அக்டோபர் 4ஆம் தேதி டெல்லி - லக்னோ இடையே இயக்கப்பட்ட தேஜஸ் விரைவு ரயில் தான், ரயில் துறையை தனியார் மயமாக்கப்பட்ட பிறகு இயங்கிய முதல் தனியார் ரயிலாகும்.
இதையும் படியுங்க:அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரயில் நிலைய கள வகுப்பு