ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள ஜேஷோல் பகுதியில் ‘ராம கதை’ விழா நேற்று மாலை நடைபெறவிருந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கவிருந்த நிலையில், பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது.
'பந்தல் சரிந்து பலியான 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம்' ராஜஸ்தான் முதலமைச்சர் அறிவிப்பு - ராஜஸ்தான் முதலமைச்சர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் பந்தல் சரிந்து உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலட் அறிவித்துள்ளார்.
ASHOK GEHLOT
அப்போது, பிற்பகல் 3.30 மணியளவில் புயல் தாக்கியதால், அந்தப் பந்தல் திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 3 பெண்கள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த 14 பேருடைய குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவியும், காயமடைந்தோர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அசேக் கெலாட் அறிவித்துள்ளார்.