நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும், 12 இலக்கு எண்களைக் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையுடன் வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பயன்படும், நிரந்தர கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, பலமுறை இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
ஆதாருடன் பான் எண்ணை இணைக்க 30ஆம் தேதி கடைசி; இணைக்கத் தவறினால்...? - last date sep 30
புதுடெல்லி: இந்த மாதம் 30 ஆம் தேதி இறுதிக்குள் ஆதார் எண்ணுடன் பான் எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை எண்ணை இணைக்கத் தவறினால் பான் அட்டை பயனற்றதாகிவிடும் என மத்திய நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது.
Laste date sep 30
இந்நிலையில், ஆதார் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்குப் பின்னர் ஆதார் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண் இணைக்கப்படவில்லை எனில், அந்த குறிப்பிட்ட நிரந்தர கணக்கு அட்டை பயனற்றதாகிவிடும் என மத்திய நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது.
மேலும், அந்த நிரந்தர கணக்கு அட்டையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர முடியுமா என்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
Last Updated : Sep 28, 2019, 11:59 AM IST