தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வரும் மார்ச் இறுதிக்குள் பான்-ஆதார் இணைப்பு கட்டாயம்! - Pan aadhar link

புதுடெல்லி: வரும் மார்ச் 31-க்குள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் பான் எண் ரத்து செய்யப்படலாம் என சிபிடிடி தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

Link

By

Published : Feb 8, 2019, 8:45 AM IST

அசோச்சாம் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவர் சுரேஷ் சந்திரா பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

போலி பான் கார்டுகளை கண்டுபிடிக்கவே, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அரங்சாங்க உத்தரவுபடி வரும் மார்ச் 31-க்குள் பான்-ஆதார் இணைப்பு நடைபெற வேண்டும். இல்லை என்றால் பான் ரத்து செய்யப்படாலாம் என எச்சரித்துள்ளார்.

இதுவரை சுமார் 42 கோடி பேர் பான் கார்டு வைத்திருக்கும் நிலையில், வெறும் 23 கோடிப் பேர் மட்டுமே ஆதாருடன் இணைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பில், வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் அனைவரும் பான்-ஆதார் இணைப்பு அவசியம் செய்திருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதேவேளையில் புதிதாக பதியப்படும் பான் கார்டுகளுக்கு ஆதார் எண் தானாகவே இணைக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details