மகாராஷ்டிராவின் கடலோர மாவட்டமான பல்கரில் ஏப்ரல் 16ஆம் தேதி மூன்று நபர்களை அப்பகுதி மக்கள் அடித்து கொலை செய்தனர். கண்டிவிலி பகுதியில் இருந்து சூரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த இரு சாதுக்களையும், ஒரு கார் டிரைவரையும் திருடர்கள் என நினைத்து தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 70க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தக் கொடூரக் கொலைகளில் தொடர்புடைய ஒருவரையும் மன்னிக்க முடியாது. அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.