தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தானில் இந்து கோயில்களை மேம்படுத்த கோரிக்கை - பாகிஸ்தான் இந்துக்கள் கோரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள கோயில் தளங்களை மேம்படுத்தி பராமரிக்க வேண்டும் என வடமேற்கு பிராந்தியத்தைச் சேர்ந்த இந்துக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Pakistan
Pakistan

By

Published : Jan 21, 2020, 1:44 PM IST

பாகிஸ்தானில் தர்பார் சாகிப் குருத்வாரா அமைந்துள்ளது. குருநானக்கின் இந்த நினைவிடத்துக்கு நாடு முழுவதிலுமிருந்தும் சீக்கியர்கள் செல்ல வசதியாக இருநாடுகளுக்குமிடையே 4 கி.மீ. தொலைவுக்குச் சாலை அமைக்கப்பட்டது.

குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கர்தார்பூர் வழித்தடத்தை ஒரே நேரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இரு எல்லைகளிலும் திறந்துவைத்தனர்.

இதனை எடுத்தக்காட்டாக எடுத்துக் கொண்டு பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள 200 கோயில் தளங்களை மேம்படுத்த வேண்டும் என வடமேற்கு பிராந்தியத்தைச் சேர்ந்த இந்துக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதனை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாத் துறை வளர்ந்து நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்து மதத் தலைவர் ஹருண் சாராப் தியால், "சுவாபி மாவட்டத்தில் மட்டும் 65 கோயில் தளங்கள் உள்ளன. நவுசேரா மாவட்டத்தில் 154 கோயில் தளங்கள் உள்ளன. தேரா இஸ்மாயில் கான் மாவட்டம் இந்து மதத்தின் வரலாற்றில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் இந்துக்கள் உள்ளனர். அவர்களைக் கவர்வதன் மூலம் பாகிஸ்தான் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்" என்றார்.

இதையும் படிங்க: இந்திய விவசாயத்தின் அடுத்த கட்டம் - செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

ABOUT THE AUTHOR

...view details