தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீர் தேர்தல் வெற்றிக்கு காத்திருக்கும் பாகிஸ்தான் பெண்! - காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்

காஷ்மீரைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்ட பாகிஸ்தான் பெண் சோமியா சதாஃப், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் சுயாட்சியாகப் போட்டியிட்டு தேர்தல் வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கிறார். சமூக பொருளாதார திட்டங்களில் பங்கேற்றிருந்த சதாஃப், பிரதமர் நரேந்திர மோடியுடனும் கலந்துரையாடியுள்ளார்.

காஷ்மீர் தேர்தல் வெற்றிக்கு காத்திருக்கும் பாகிஸ்தான் பெண்!
காஷ்மீர் தேர்தல் வெற்றிக்கு காத்திருக்கும் பாகிஸ்தான் பெண்!

By

Published : Dec 22, 2020, 7:51 AM IST

ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரின் டிராக்முல்லா குப்வாரா மாவட்டத்தில் இருந்து மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் சுயாட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார்.

காஷ்மீரைச் சேர்ந்த அப்துல் மஜீத் பட் என்பவரை திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் பெண் சோமியா சதாஃப், ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட குப்வாரா தொகுதியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார். தனது காஷ்மீரி கணவர் அப்துல் மஜீத் பட்டுடன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சதாஃப் காஷ்மீருக்கு வருகைத்தார்.

பாகிஸ்தான் பெண் சோமியா சதாஃப்

சமூகப் பணி

கடந்த 2015 ஆம் ஆண்டில் வறுமையை ஒழிப்பதற்கான மத்திய அரசின் 'உமீத்' திட்டத்தின் கீழ் தனது சிறந்த பங்களிப்பை வழங்கினார். இதேபோல், கடந்த 2018 ஆம் ஆண்டில், 'முற்போக்கான பெண்கள் தொழில் முனைவோர்' திட்டத்திற்காக ஜம்மு-காஷ்மீரை பிரதிநிதித்துவப் படுத்தினார்.

பாகிஸ்தான் பெண் சோமியா சதாஃப்

பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடல்

மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சமூக பொருளாதார திட்டங்களில் பங்காற்றியுள்ள சதாஃப் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடியுள்ளார் .

காஷ்மீர் வந்த சோமியா சதாஃப்

காஷ்மீரின் குப்வாராவின் படர்காம் கிராமத்தைச் சேர்ந்த சதாபின் கணவர் அப்துல் மஜீத் பட், கடந்த 1990 களில், ஆயுத பயிற்சிக்காகப் பாகிஸ்தான் சென்றார். அங்கு, ஆயுதப் பயிற்சிக்குப் பதிலாக படிக்க முடிவு செய்த அவர், லாகூர் கல்லூரியில் சேர்த்து படித்துவந்தார்.

அப்போது தான் சதாப்பைச் சந்தித்து, கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு காஷ்மீருக்கு வந்தனர்.

மௌலானா ஆசாத் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்துள்ள சோமியா சதாஃப், தன்னைச் சுற்றியுள்ள மக்களின் அன்பின் காரணமாக காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததாகக் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தலைமையிலான மாநில அரசு, கடந்த 2010 ஆம் ஆண்டில் ஆயுதப் பயிற்சிக்காகச் சென்ற போராளிகள் பாகிஸ்தானில் இருந்து குடும்பங்களுடன் வீடு திரும்புவதற்கான கொள்கையை அறிமுகப்படுத்தியது.

இருப்பினும், அரசாங்கம் தங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று காஷ்மீர் ஆண்களை திருமணம் செய்துகொண்ட பல பாகிஸ்தான் பெண்களின் குடும்பங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த கோரிக்கைகளை முன்னிலைப்படுத்த ஸ்ரீநகரில் அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

தேர்தல் வெற்றிக்கு காத்திருக்கும் சதாஃப்

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. உள்ளூர் மக்களின் நல்மதிப்பை பெற்றுள்ள சோமியா சதாஃப், இத்தேர்தலில் வெற்றிப்பெற்று மக்கள் நலப்பணிகளை ஆற்றுவாரா என்ற ஆர்வத்துடன் தேர்தல் முடிவுகளை அவரது ஆதரவாளர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

இதையும் படிங்க:ஜம்மூ காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

ABOUT THE AUTHOR

...view details