ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், கத்துவா ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் இன்று (சனிக்கிழமை) திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 1ஆம் தேதி ஷாபூர், கிர்னி, கஸ்பா பகுதிகளின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அப்போது சிறிய ரக துப்பாக்கி, மோட்டார் ஷெல் ரக குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டது.