தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் - ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு

ஸ்ரீநகர் : போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர், பூஞ்ச் மாவட்டத்தில் இன்று (ஆக.10) மீண்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

pakistani-troops-fire-at-border-posts-along-loc-in-poonch
pakistani-troops-fire-at-border-posts-along-loc-in-poonch

By

Published : Aug 10, 2020, 1:49 PM IST

இந்திய - சீன எல்லைப் பிரச்னைகள் ஒருபுறம் முடிவடையாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் மான்கோட், ஷாப்பூர், கிர்னி, கிருஷ்ணா காதி ஆகிய பகுதிகளில் நேற்று (ஆக.9) பாகிஸ்தான் துருப்புக்கள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தின.

இந்நிலையில், இன்று (ஆக.10) காலை, பாலகோட் பகுதியில், 10.15 மணியளவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details