லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் இந்தியாவில் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்துவருகின்றனர். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் நுழைய 500க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் முற்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. எத்தனை பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முற்பட்டாலும், இந்தியாவில் அமைதியை நிலைநாட்ட ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
எல்லைக்குள் ஊடுருவ பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காத்திருப்பு: தயார் நிலையில் ராணுவம் - எல்லைக்குள் நுழைய காத்திருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்!
ஜம்மு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள பயிற்சி முகாம்களில் 500க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காத்திருப்பதாக இந்திய ராணுவ அலுவலர் தெரிவித்துள்ளார்.
Pakistani terrorists awaiting entry into Kashmir borders
மேலும், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தற்போது இந்தியாவை உளவு பார்க்க கேமரா பொருத்திய சிறிய விமானங்களை பயன்படுத்திவருகின்றனர். பாகிஸ்தானின் அனைத்துவிதமான அச்சுறுத்தலையும் இந்திய ராணுவம் முறியடிக்கும் என்பதை நம்புகிறோம். அவர்களுடையய எந்த முயற்சியும் வெற்றிபெற அனுமதிக்க மாட்டோம் எனக் கூறினார்.
இதையும் படிங்க: காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை!