தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தான் உளவாளி ராஜஸ்தானில் கைது! - பாகிஸ்தான் உளவாளி கைது

ஜெய்ப்பூர்: இந்திய ராணுவம் தொடர்பான முக்கிய புலனாய்வு தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை அம்மாநில காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் படை கைது செய்துள்ளது.

Pakistani spy arrested in Rajasthan's Barmer
Pakistani spy arrested in Rajasthan's Barmer

By

Published : Oct 24, 2020, 1:55 PM IST

ராஜஸ்தான் பார்மரிலிருந்து பாகிஸ்தானுக்கு ராணுவ தகவல்களை கடத்துவதாக அம்மாநில காவல் துறையின் பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்), சிபிசிஐடி ஆகியவற்றிற்கு தகவல் வந்தது.

இது குறித்து விசாரித்த காவல் துறையினர், பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ராஜஸ்தான் பார்மரைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர், எல்லைப் பகுதியில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றிவந்தது தெரியவந்து. மேலும், அந்த நபர் குறித்த தகவலை காவல் துறையினர் திரட்டி வருகின்றார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் எல்லை தாண்டிய படைகள் தொடர்பான முக்கியமான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் அனுப்பியது கண்டறியப்பட்டது. உளவுத்துறை, பாதுகாப்பு அமைப்புகள் அவரை பார்மர் மாவட்டத்தில் உள்ள பிஜ்ரால் காவல் நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு கொண்டுச் சென்றனர்.

முன்னதாக, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக 36 வயது நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் பாதுகாப்பு அலுவலர்களால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...குஜராத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

ABOUT THE AUTHOR

...view details