கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேற்று மாநிலங்களில் பணி செய்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதேபோல் விளிம்புநிலை மக்களும், தினக்கூலி தொழிலாளர்களும் அன்றாடம் உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக ராஜஸ்தான் வந்து வேலை செய்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு, இருப்பிடமின்றி இருக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் பேசுகையில், ''நாங்கள் பாகிஸ்தானிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக வந்தோம். ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நாளுமே உணவிற்கு கடினமாக உள்ளது. அரசிடமிருந்து இதுவரை எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. அருகிலிருக்கும் மக்கள் எங்களுக்கு சிறுசிறு உதவிகளை செய்கின்றனர்.