தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்துத்துவ கொள்கையை ஒருபோதும் கைவிட்டதில்லை - சிவசேனா

மும்மை: மராத்திய மக்களுக்காக தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கும் நாங்கள், இந்துத்துவ கொள்கையை ஒருபோதும் கைவிட்டதில்லை என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

SENA
SENA

By

Published : Jan 25, 2020, 10:53 AM IST

பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் சட்டவிரோத குடியேறிகளை நாட்டிலிருந்து விரட்ட மாபெரும் பேரணி நடத்தப்படும் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே அறிவித்திருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில், சிவசேனா தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், "பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் நாட்டிலிருந்து விரட்டப்பட வேண்டும். அதில், சந்தேகம் இல்லை.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி நேற்று ஆதரித்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மராத்திய மக்களுக்காக தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கும் நாங்கள், இந்துத்துவ கொள்கையை ஒருபோதும் கைவிட்டதில்லை. இந்த காரணத்திற்காகதான் மக்கள் எங்களை ஏற்று கொண்டுள்ளனர்.

தங்களின் சொந்த தேவைக்காக சிலர் இந்துத்துவ கொள்கையை பயன்படுத்தி கொள்கின்றனர். சில கட்சிகள் அதனை செய்திருந்தபோதிலும் அதனை ஏற்க எங்களுக்கு பெருந்தன்மை உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘பூமியின் சொர்க்கமாக காஷ்மீர் விளங்குகிறது’ - ரவி சங்கர் பிரசாத் பெருமிதம்

ABOUT THE AUTHOR

...view details