காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று (ஜூலை27) காலை 10.30 மணியளவில் எல்லையை தாண்டி பாகிஸ்தான் சிறிய ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு, மோட்டார் தாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்டது.
இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதே போல், கடந்த ஜூலை 23ஆம் தேதி, பூஞ்ச், குப்வாரா மாவட்டங்களில் எல்லையை தாண்டி துப்பாக்கிச் சூடு, ஷெல் தாக்குதல்களை பாகிஸ்தான் மேற்கொண்டதில் பொதுமக்கள் ஒருவர் காயமடைந்துள்ளார்.