ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அத்துமீறி உள்ளே நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக ராக்கெட் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இது குறித்து கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், ”இன்று காலை 11 மணி அளவில் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு, ஷெல் குண்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும்” என்றார்.