ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கம் செய்தபின்பு, பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறித் தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.
இதனிடையே, ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கஸ்பா, கிர்னி ஆகிய பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து, இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை 11 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவ தரப்பிலிருந்தும் பதிலடி தரப்பட்டது.