ஜம்மு-காஷ்மீரின் லேவில் வசித்துவந்த கைரூன் நிசா என்ற பெண் ஆகஸ்ட் 26ஆம் தேதி தனது இல்லத்திற்கு அருகே இருந்த ஆற்றின் நீரில் மூழ்கி காணாமல் போனார். அவரின் சடலம் பாகிஸ்தானின் பால்டிஸ்தானில் உள்ள ஷியோக் ஆற்றில் இருந்து உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டது.
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பெண்ணின் சடலத்தை இந்தியாவிடம் ஒப்படைத்த பாகிஸ்தான்! - பால்டிஸ்தான்
ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் பால்டிஸ்தானில் உள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட காஷ்மீர் பெண்ணின் சடலம் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த அரசு அலுவலர்கள், பாகிஸ்தான் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு புகைப்படத்தின் மூலம் அடையாளத்தை உறுதி செய்தனர். இதையடுத்து, உடலை பாகிஸ்தானிலிருந்து இந்தியா கொண்டுவருவதற்கான பணியை தொடங்கினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் உடலை மீண்டும் கொண்டு வருவது கடினமான வேலையாக இருந்ததாகவும், ஆனால் எல்லையின் இருபுறமும் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட கடும் முயற்சியின் காரணமாக, உடலை இந்தியா கொண்டுவரும் செயல்முறை எளிதாக்கியது என்று அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.