இந்திய அரசியலமைப்பு சட்டம் 370ஐ மத்திய பாஜக அரசு நீக்கியது. இதனைத் தொடர்ந்து, இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவந்தது. உலக நாடுகள் அனைத்தும் பொறுமை காக்கும்படி இரு நாடுகளிடம் கேட்டுக்கொண்ட பிறகும்கூட, இந்திய எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திவந்தது. இதற்கிடையே, இந்தியாவுடனான ரயில்வே சேவையை பாகிஸ்தான் நிறுத்திக்கொண்டது.
இந்தியாவுக்கான வான்வழிப்பாதை முழுவதும் துண்டிக்கப்படுமா? - இந்தியாவுக்கான வான்வழிப்பாதை
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கான வான்வழிப்பாதை முழுவதுமாக துண்டிப்பது குறித்து ஆலோசனை நடத்திவருவதாக பாகிஸ்தான அமைச்சர் பாவாத் சவுத்ரி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவுக்கான வான்வழிப்பாதையை முழுவதுமாக துண்டிக்க பிரதமர் இம்ரான் கானிடம் ஆலோசனை நடத்திவருவதாக பாகிஸ்தான் அமைச்சர் பாவாத் சவுத்ரி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் தரைவழியாக இந்திய - ஆப்கானிஸ்தான் நாடுகள் மேற்கொள்ளும் வர்த்தகத்துக்கு தடை விதிப்பது குறித்தும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார். மோடி ஆரம்பித்துவைத்ததை பாகிஸ்தான் முடித்துவைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.