தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: இந்தியாவின் மூத்த உயர் அலுவலருக்கு பாகிஸ்தான் சம்மன் - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்

இஸ்லாமாபாத்:2020ஆம் ஆண்டில் இந்தியா இதுவரை ஆயிரத்து 101 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

Pak
Pak

By

Published : May 21, 2020, 11:29 AM IST

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இந்தியா மீது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து இந்திய தூதரக மூத்த உயர் அலுவலர் ஒருவருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அலுவலகம், ”எல்லைப்பகுதியில் இந்தியப் படைகள் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் பொதுமக்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் இந்திய ராணுவம் பீரங்கி தாக்குதல், ஆயுதங்களை கொண்டு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது” என்று கூறியுள்ளது.

மேலும் 2020ஆம் ஆண்டில் இந்தியா இதுவரை ஆயிரத்து 101 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதையும் படிங்க:போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: பூஞ்ச் எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்

ABOUT THE AUTHOR

...view details