தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியப் படைகள் அத்துமீறுவதாக தூதருக்கு அழைப்பு!

இஸ்லாமாபாத்: எல்லைப் பகுதியில் இந்தியப் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டும் பாகிஸ்தான், புகாரளிக்க மூத்த இந்திய தூதருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ak
ak

By

Published : Oct 30, 2020, 7:35 PM IST

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அவ்வப்போது இரு தரப்பினரிடையே தாக்குதல் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்தியப் படைகள் பாகிஸ்தான் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த அக்டோபர் 29ஆம் தேதி நெசாபீர், ராக்ஷிக்ரி செக்டார்களில் இந்தியப் படைகள் நடத்திய தாக்குதலில், 22 வயது ருக்ஷானா, 36 வயது முஹம்மது ஆசாம் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியப் படைகள் தொடர்ந்து பீரங்கித் தாக்குதல்கள், கனரக திறன்கொண்ட மோட்டார் மற்றும் தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்துவதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து கலந்துரையாட மூத்த இந்தியத் தூதரை பாகிஸ்தான் அழைத்துள்ளது. 2003ஆம் ஆண்டின் போர் நிறுத்த உடன்படிக்கையை மதிக்கும்படி பாகிஸ்தான் இந்தியாவை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details