தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இந்தியாவில் தாக்குதல் நடந்தால் பாக். கவலைப்பட வேண்டும்' - விமானப்படை தளபதி - இந்தியாவில் தாக்குதல் நடந்தால் பாகிஸ்தான் கவலைப்பட வேண்டும் ஆர்கேஎஸ் பதௌரியா

டெல்லி : இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், அதுகுறித்து பாகிஸ்தானும் கவலைப்பட வேண்டும் என விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதௌரியா தெரிவித்துள்ளார்.

AIR CHIEF
AIR CHIEF

By

Published : May 18, 2020, 9:34 PM IST


கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கர்னல் அஷுதோஷ் ஷர்மா உள்ளிட்ட நான்கு பாதுகாப்புப் படையினர் வீர மரணமடைந்தனர்.

இதையடுத்து, இருநாட்டு எல்லைப் பகுதிக்கு அருகே பாகிஸ்தான் விமானப் படை தீவிர கண்காணிப்புப் பகுதியில் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதௌரியா அளித்த பிரத்யேகப் பேட்டியில், "எப்போதெல்லாம் நம் மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல் நடக்கிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் (பாகிஸ்தான்) கவலைப்பட வேண்டும்.

இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதிகளை தூண்டிவிடுவதை அவர்கள் (பாகிஸ்தான்) நிறுத்திக்கொண்டால், கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இந்திய விமானப்படை 24 மணிநேரமும் தயாராக உள்ளது" என்றார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் உயிரிழந்தனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அதே மாதம் 26ஆம் தேதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் முகாமிட்டிருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க : மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details