இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மென்செஸ்டரில் நடைபெற்றது. இதில் இந்தியா பல ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் "வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். மேலும் வான்வழித் தாக்குதலைப்போல், இதையும் சிறப்பாக விளையாடி வென்று காட்டியுள்ளீர்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
உலகக் கோப்பை: அமித்ஷா ட்வீட்டுக்கு பாகிஸ்தான் பதில் - world cup cricket
இஸ்லாமாபாத்: அமித்ஷாவின் ட்வீட்டிற்கு, பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பதிலடி கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமித்ஷா ட்விட்டிற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் பாதுகாப்புத் துறைச் செய்தித் தொடர்பாளர்
இதற்கு பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர், இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தோல்வியை வான்வழித் தாக்குதலுடன் ஒப்பிட வேண்டாம் என்று அமித்ஷாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.