ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் ஒஸ்மான் அலி கான் லண்டனில் உள்ள தேசிய வெஸ்ட்மின்ஸ்டர் வங்கியில் உள்ள ஹைதராபாத் மாநில வங்கி கணக்கிலிருந்து, அதே வங்கியில் உள்ள மற்றொரு கணக்கிற்கு ஒரு மில்லியன் டாலரை மாற்றியதிலிருந்து பிரச்னை தொடங்கியது.
லண்டன் வங்கியிலிருந்த இரண்டாவது கணக்கை பாகிஸ்தானின் உயர் ஆணையாளராக இருந்த ஹபீப் இப்ராஹிம் என்பவர் வைத்திருந்தார். நிஜாமின் நிதி அமைச்சர்தான் அவர் கணக்கில் கையொப்பமிட்டவர் என்றாலும், நிஜாமின் அனுமதியின்றி நிதியை திரும்பப் பெறவோ அல்லது மாற்றவோ அவருக்கு அதிகாரம் இல்லாமலிருந்தது. மேலும் நிதியை மறு பரிமாற்றம் செய்ய நிஜாமின் அறிவுறுத்தல்களும் பின்பற்றப்படாமல் போனது.