தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு: ஹர்சிம்ரத் கவுர் பாதல் - ஹர்சிம்ரத் கவுர்

டெல்லி: பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானின் உண்மையான முகம் தற்போது வெளிப்பட்டுவிட்டது என சீக்கிய குருத்வாரா சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறினார்.

Pakistan is a terrorist state: Harsimrat Kaur Badal
Pakistan is a terrorist state: Harsimrat Kaur Badal

By

Published : Jan 6, 2020, 8:13 AM IST

பாகிஸ்தானில் உள்ள நங்கானா குருத்வாரா மீதான தாக்குதல் தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் நமது ஈடிவி பாரத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. பாகிஸ்தான் பிரதமர் காங்கிரசை போன்று அமைதி காக்கிறார். பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு” என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சுக்கு பதிலளித்த கவுர், “காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் கெஜ்ரிவாலுக்கு பழக்கம் உள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலின்போது காலிஸ்தான் ஆதரவாளர்களின் வீட்டில் அவர் தங்கியுள்ளார். அவருக்கு வெளிநாட்டு நிதி கிடைத்துள்ளது” என்றார்.

மேலும் டெல்லி முதலமைச்சர் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பதற்கு முன்னர் மத்திய அரசையும், இந்திய குடிமக்களையும் நம்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ஜேஎன்யூ தாக்குதல்: ஸ்டாலின், ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details