ஜம்மு-காஷ்மீர் பாண்டிபோரா மாவட்டத்தில் உள்ள கன்சால்வான் பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. சிறிய ரக பீரங்கிகளுடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து தாக்குதல் நடத்தியதாக ராணுவ அலுவலர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, செப்டம்பர் 17ஆம் தேதி பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதேபோல் செப்டம்பர் 5ஆம் தேதி பூஞ்ச் கட்டுப்பாட்டுப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.