தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தானின் மரபணுவிலே பயங்கரவாதம்: இந்தியா - அனன்யா அகர்வால்

பாரிஸ்: யுனெஸ்கோவில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார் இந்தியாவின் அனன்யா அகர்வால். பாகிஸ்தானின் திமிர் பேச்சுக்கு அவர் அளித்த பதிலில், “பாகிஸ்தானின் மரபணுவிலே பயங்கரவாதம்” உள்ளது என்று கூறினார்.

Pakistan has "DNA of terrorism": India's reply on Kashmir at UNESCO

By

Published : Nov 15, 2019, 12:44 PM IST

பாரிஸில் நடந்த யுனெஸ்கோ பொதுக்கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பி இந்தியா மீது குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் அனன்யா அகர்வால் பாகிஸ்தானின் பாணியிலேயே பதிலடி கொடுத்தார். இவ்விவகாரம் தொடர்பாக அனன்யா அகர்வால் பேசியதாவது
யுனெஸ்கோ அமைப்பை அரசியல் ரீதியாக பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு முதலில் என் கண்டனங்கள். பாகிஸ்தானின் மரபணுவிலே பயங்கரவாதம் உள்ளது. பாகிஸ்தானின் நரம்புதளர்ச்சி மனநிலையை பார்க்கும் போது, அந்நாடு பொருளாதாரத்தின் விளிம்பில் நிற்பது தெளிவாகிறது. உலகின் அனைத்து கருப்பு செயல்களுக்கும் (சட்டத்துக்கு புறம்பான) பாகிஸ்தான் தாய்வீடு. அதனை பயங்கரவாதம், தீவிரவாதத்தால் அவர்கள் நிரப்புகின்றனர். அவர்கள் பயங்கரவாதத்தை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கின்றனர்.

மற்ற நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என அந்நாட்டு பிரதமரே (இம்ரான் கான்) கூறுகிறார். பாகிஸ்தானில் என்ன நடக்கிறது? முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், “தீவிரவாதியான ஓசாமா பின்லேடனையும் ஹக்கானி பயங்கரவாதிகளையும் தலைவர்கள் என்கிறார். அவர்களை அந்நாட்டின் கதாநாயகர்கள் என்றும் வர்ணிக்கிறார். அந்த மண்ணில் சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர். அவர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

1947ஆம் ஆண்டு பாகிஸ்தானில் 23 விழுக்காடு சிறுபான்மையினர் (அஹமதியா, பத்தான்ஸ், சிந்து, இந்து, சீக்கியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட) இருந்தனர். ஆனால் தற்போது வெறும் மூன்று விழுக்காடு மட்டுமே அவர்கள் உள்ளனர். பெண்கள் மீதான குற்றங்கள், கவுரவக் கொலைகள், வெறுப்பு பேச்சுகள் உள்ளிட்ட குற்றங்களும் அதிகரித்து காணப்படுகிறது. இதுபோன்ற நாடுகளுக்கு யுனெஸ்கோ தனது உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்ய முன்வர வேண்டும்.இவ்வாறு அனன்யா அகர்வால் கூறினார்.

இதையும் படிங்க: யார் வென்றாலும் அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம்!

ABOUT THE AUTHOR

...view details