தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்! - இந்திய பதிலடி

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு - காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

India - Pakistan

By

Published : Aug 23, 2019, 12:55 AM IST

ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவுடனான வர்த்தகம், ரயில்வே போக்குவரத்து ஆகியவற்றை பாகிஸ்தான் முடக்கிக் கொண்டது. தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ரஜௌரி மாவட்டத்தில் இன்று இரவு 8:45 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், அதற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details