ஜார்ஜியா நாட்டின் ஏன்டனோவ்-12 கனரக சரக்கு விமானம் பாகிஸ்தானின் கராச்சி வழியாக டெல்லி சென்றது. பாகிஸ்தான் வான்பாதையில் இருந்து நுழைந்த அந்த விமானம், அதற்குரிய வான்பாதையில் பயணிக்காமல், வடக்கு குஜராத்தை நோக்கி சென்றுள்ளது. இதனால், வான் விதிகளை மீறி பறந்த அந்த விமானத்தை, இந்தியா விமானப் படையைச் சேர்ந்த சுகோய் விமானம் இடைமறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தரை இறங்கச் செய்தது.
பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த விமானத்தால் பரபரப்பு - antonov-12
டெல்லி: விதிகளை மீறி பாகிஸ்தான் வான் எல்லையிலிருந்து நுழைந்த சரக்கு விமானத்தை இந்திய விமானப்படை அலுவலர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தரை இறக்க செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏன்டனோவ்-12
அதைத் தொடர்ந்து, அந்த விமானத்தை ஓட்டி வந்த பைலட்களிடம் இந்தியா விமானப்படை அலுவுலர்கள் விசாணை செய்த பின் தவறுதலாக பாதை மாறி சென்றது தெரிய வந்தது. பின்னர், அந்த விமானத்தை இந்திய விமானப்படை அலுவலர்கள் விடுவித்தனர்.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் - இந்தியா இடையே பதற்றம் நிலவும் சூழ்நிலையில், பாகிஸ்தான் வழியாக ஒரு விமானம் விதிகளை மீறி இந்திய பகுதியில் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : May 10, 2019, 9:22 PM IST