இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று காலை 9.15 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். மேலும், மோட்டர் குண்டுகளை வீசியும் அவர்கள் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இந்தியப் பாதுகாப்பு படையினர், இதற்கு தக்க பதிலடி கொடுத்தனர். இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.