ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டியுள்ள பாலகோட் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து இந்திய ராணுவம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
நேற்று இரவு 10 மணி அளவில் இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. கடந்த சில நாள்களாக பாகிஸ்தான் ராணுவம் இப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்திவருகிறது.