போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளில் அடிக்கடி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி-வருகிறது. கடந்த திங்கள் முதல் தொடர்ந்து மூன்று நாள்களாக எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திவருகிறது.
இன்று காலையும் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இது தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், ”இன்று காலை 9.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர், பூஞ்ச் மாவட்ட கிர்னி, தேக்வார் செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப் பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.