தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ட்ரோன்களை பயன்படுத்தி குண்டு வீச பாக். திட்டம்: பி.எஸ்.எஃப் - பிஎஸ்எஃப்

ஜம்மு - காஷ்மீர் சர்வதேச எல்லையான ஆர்.எஸ்.புரா மற்றும் சம்பா பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்களை பயன்படுத்தி குண்டு வீச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

pak-to-use-drones-to-bomb-security-establishments-near-jammu-border-bsf
pak-to-use-drones-to-bomb-security-establishments-near-jammu-border-bsf

By

Published : Aug 23, 2020, 6:14 PM IST

இந்திய எல்லையில் பாகிஸ்தான் நுண்ணறிவு பிரிவினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எல்லை பாதுக்காப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லப் பகுதிகளில் பாகிஸ்தானும், கிழக்கு லடாக்கில் சீனாவும் தொடர்ந்து அத்துமீறி வருவதால், இருமுனை போர் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தில் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் நடமாட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, ட்ரோன்கள் உதவியுடன் போதை பொருள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் எடுத்துச் செல்ல ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக பி.எஸ்.எஃப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பிஎஸ்எஃப் அலுவலர் பேசுகையில், ''காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பயங்கரவாதிகளால் ஊடுருவ முடியாததால், சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் நடவடிக்கை அதிகரித்துள்ளது'' என்றார்.

கடந்த சனிக்கிழமையன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து பேரை பி.எஸ்.எஃப் சுட்டுக்கொலை செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து ஆயுதங்களும், போதை பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தொடர்ந்து எல்லை மீறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தொடர்ந்து கோமா நிலையில் இருக்கும் பிரணாப் முகர்ஜி!

ABOUT THE AUTHOR

...view details