பாகிஸ்தான் நாட்டின் பாலகோட் பகுதியில் இந்தியா எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தியதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்பகுதியில் பறக்க அந்நாடு தடைவிதித்தது.
பாகிஸ்தானுக்குள் நுழைகிறது மோடியின் சிறப்பு விமானம்!
டெல்லி: பிரதமர் மோடியின் சிறப்பு விமானம் பாகிஸ்தான் நாட்டில் பறக்கு அந்நாடு அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், ஜூன் 13ஆம் தேதி பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க விமானம் மூலம் கிர்கிஸ்தானுக்குச் செல்ல இருக்கிறார். பாகிஸ்தானின் வழியே சென்றால் நான்கு மணிநேரத்தில் சென்றுவிடலாம். வேறு வழியில் சென்றால் எட்டு மணிநேரம் ஆகும். எனவே, பிரதமர் செல்லும் விமானத்துக்கு பாகிஸ்தான் வான்பகுதியில் அனுமதி அளிக்க வேண்டும் என இந்தியா கோரிக்கைவிடுத்தது.
தற்போது பிரதமர் மோடியின் சிறப்பு விமானம் பாகிஸ்தானின் வான் வழியில் பறக்க அந்நாடு அனுமதியளித்துள்ளது.